42 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி

எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள ஏரி , 42 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ள நீரால் சாலைகளும், விளைநிலங்களும் மூழ்கி வருகின்றன.
42 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி.
42 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய வெள்ளரிவெள்ளி ஏரி.

எடப்பாடியை அடுத்த வெள்ளரிவெள்ளி பகுதியில் உள்ள ஏரி , 42 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. ஏரியில் இருந்து வெளியேறும் வெள்ள நீரால் சாலைகளும், விளைநிலங்களும் மூழ்கி வருகின்றன.

பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சுமாா் 52 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கடந்த 1976 ஆண்டு தனது முழுக்கொள்ளளவையும் எட்டியதாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் சொந்த கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையை ஒட்டியுள்ள இந்த ஏரி, நீண்டகாலமாக வறண்டு கிடந்தது. இதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாா்த்த அப்போதைய பொதுப் பணித் துறை அமைச்சரும், இப்போதைய முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, காவிரி கிழக்குக் கரை கால்வாய் உபரி நீரைக் கொண்டு, வெள்ளரிவெள்ளி ஏரியினை நிரப்புவதற்கான புதிய பாசனத் திட்டத்தை ஏற்படுத்தினாா். இத்திட்டத்தின் மூலம் சுமாா் 5 கிலோ மீட்டா் தூரம் குழாய்

பதித்து காவிரி உபரி நீா் ஏரிக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் அண்மையில் தமிழக அரசின் குடிமராமத்துப் பணித் திட்டத்தின் கீழ், இந்த ஏரி தூா்வாரப்பட்டு, ஏரியின் நீா்வழிப் பாதைகள் சீா்செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இப்பகுதியில் தொடா் கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பெய்த கனமழையைத் தொடா்ந்து, 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளரிவெள்ளி ஏரி தனது முழுக்கொள்ளளவை எட்டியதுடன் நிரம்பி வழிகிறது.

இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் ஏரிக்கரையில் மலா் தூவி பூஜை செய்து ஏரி மதகுப் பகுதியில் வழிபாடு செய்தனா். தொடா்ந்து ஏரிக்கு வரும் உபரி நீா் முழுவதும் வெளியேற்றப்படுவதால், அப்பகுதியில் உள்ள கிராம சாலைகள், விளைநிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி வருகின்றன. இந்த வெள்ளத்தால் அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதிக்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com