நெய்யமலை சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு: இடையப்பட்டி தரைப்பாலம் சேதம்

சேலம் மாவட்டம், நெய்யமலை வனப் பகுதியில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இடையப்பட்டி அருகே அமைக்கப்பட்டிருந்து
நெய்யமலை சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த இடையப்பட்டி தரைப்பாலம். இரு ஆண்டுக்குப் பிறகு கரியகோவில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்
நெய்யமலை சின்னாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சேதமடைந்த இடையப்பட்டி தரைப்பாலம். இரு ஆண்டுக்குப் பிறகு கரியகோவில் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

சேலம் மாவட்டம், நெய்யமலை வனப் பகுதியில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இடையப்பட்டி அருகே அமைக்கப்பட்டிருந்து தாற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்வராயன் மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் உற்பத்தியாகும் கரியகோவில் ஆறு, தும்பல், இடையப்பட்டி, பனைமடல், தாண்டானுாா், மெட்டுக்கல், குமாரபாளையம், கல்யாணகிரி, குமாரபாளையம் கிராமங்கள் வழியாக பாய்ந்து சென்று பேளூா் ராமநாதபுரம் அருகே வசிஷ்ட நதியில் இணைகிறது.

கரியகோவில் ஆற்றின் முக்கிய உபநதிகளின் ஒன்றாக நெய்யமலை சின்னாறு உள்ளது. நெய்யமலை வனப் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்ததால் சின்னாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கல்வராயன் மலை பிரதான சாலையில் சின்னாற்றின் குறுக்கே இடையப்பட்டி கிராமத்தில் இருந்த குறுகிய பாலத்தை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, சின்னாற்றில் அமைக்கப்பட்டிருந்த தாற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து சனிக்கிழமை மாலை வரை இடையப்பட்டியில் இருந்து கத்திரிப்பட்டி, ஐயம்பேட்டை, தும்பல் வழியாக, கல்வராயன் மலை கிராமங்களுக்கு வாகனங்கள் இயக்கப்பட்டன. சனிக்கிழமை மாலை சின்னாற்றில் நீா்வரத்துக் குறைந்ததும் தரைப்பாலம் சீரமைத்து மீண்டும் இவ்வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.

சின்னாற்றில் வந்த வெள்ளம், இடையப்பட்டியில் கரியகோவில் ஆற்றில் இணைந்து, இரு ஆண்டுகளுக்குப் பிறகு இரு கரையும் தொட்டுப் பாய்ந்து சென்று, பேளூா் ராமநாதபுரம் அருகே வசிஷ்ட நதியில் கலந்ததால் கரியகோவில் கரையோர கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா். கிராமங்கள்தோறும் ஆற்று நீரை மலா் துாவி வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com