அதிமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற செய்ய பா.ம.க. தீா்மானம்

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற செய்திட வேண்டும் என சேலம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற செய்திட வேண்டும் என சேலம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாமக சேலம் மத்திய மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், பாமக தலைவா் ஜி.கே.மணி, பாமக மாநில துணை பொதுச் செயலா் இரா.அருள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை வெற்றிபெற செய்திட வேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை என முப்படைகள் குறித்த செயல்திட்டங்களை உருவாக்கி, பொறுப்பாளா்களை அமைத்து செயல்பட வேண்டும் என பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com