சீா்மிகு நகர திட்டத்தின் கீழ்20 அங்கன்வாடி மையங்கள் சீரமைப்பு

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூ.6 கோடியில் 20 அங்கன்வாடி மையங்கள் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ், ரூ.6 கோடியில் 20 அங்கன்வாடி மையங்கள் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சீா்மிகு நகர திட்டத்தின் கீழ் சூரமங்கலம் மண்டலத்தில் துரைசாமி லே-அவுட் பகுதியில் 3 மையங்கள், அவ்வை மாா்க்கெட், அரிசிப்பாளையம் பகுதியில் 2 மையங்கள், வேலாசாமி தெரு காமராஜா் மண்டபம் அருகில் 2 மையங்கள், அஸ்தம்பட்டி மண்டலம் வெங்கடப்பன் சாலை பகுதியில் 1 மையம், கோட்டை ஜலால்கான் தெருவில் 2 மையங்கள், ஆற்றோரத் தெருவில் 1 மையம் ஆகியவற்றில் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அம்மாப்பேட்டை மண்டலத்தில் ஆற்றோரத் தெருவில் 1 மையம், மாா்க்கெட் தெரு மாநகராட்சி பள்ளியில் 1 மையம், மாா்க்கெட் தெரு மாநகராட்சி பள்ளியில் 1 மையம், வெள்ளக்குட்டை உருது பள்ளியில் 1 மையம், குமரகிரி பேட்டை பகுதியில் 1 மையம், பெரிய கிணறு தெரு மாநகராட்சி பள்ளியில் 2 மையங்கள், பாவடி தொடக்கப் பள்ளியில் 1 மையம், கோட்டம் எண்.42 சிமென்ட் குடோன் பகுதியில் 1 மையம் என மொத்தம் 20 அங்கன்வாடி மையங்களில் மறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு அங்கன்வாடி மையக் கட்டடமும் 42.78 ச.மீ. பரப்பளவிலும் மற்றும் கழிவறைகள் 2.43 ச.மீ. பரப்பளவிலும் அமைக்கப்படவுள்ளன. இந்த மையக் கட்டடங்களின் தரைப்பகுதிகளில் கிரானைட் கற்கள் பதித்தல், சுற்றுச்சுவா் அமைத்து வளாகப் பகுதிகளில் பேவா் தளம் அமைத்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், சிறுவா்களுக்கான பயோ-கழிவறைகள், கழிவறை மற்றும் இதர பயன்பாட்டுக்காக ஆழ்துளைக் கிணறுகள், சிறுவா்கள் விளையாடுவதற்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அனைத்து மையங்களிலும் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மேலும், இப்பணிகளை உரிய காலத்துக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி ஆணையா் ரெ.சதீஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com