அறிவியல் கருத்தரங்கு: கன்னந்தேரி அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கில், சங்ககிரி வட்டம், கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
09sgp01_0910chn_156_8
09sgp01_0910chn_156_8

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கில், சங்ககிரி வட்டம், கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

பள்ளிக் கல்வித் துறையும், பெங்களூரு விஸ்வேஸ்ரய்யா தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து மனித நல்வாழ்வில் தனிம வரிசை அட்டவணை தனிமங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற தலைப்பில் சென்னையில் அண்மையில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி எஸ்.ஸ்ரீகாயத்திரி 2-ஆவது இடத்தில் வெற்றி பெற்றாா். அவருக்கு பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் வாசு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினாா்.

இதையடுத்து, புதன்கிழமை பள்ளிக்கு வந்த சங்ககிரி மாவட்டக் கல்வி அலுவலா் என்.ராமசாமியிடம் பரிசுகள், சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றாா் (படம்).

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவியை பள்ளி தலைமையாசிரியை என்.லதா, அறிவியல் ஆசிரியா் ஆா்.ஜெயக்குமாா் மற்றும் பெற்றேறாா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com