ஓமலூா் நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டும் பணி தொடக்கம்

ஓமலூரில் உள்ள நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். வெற்றிவேல் வியாழக்கிழமை துவக்கி வைத்தாா்.

ஓமலூரில் உள்ள நூலகத்துக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பணிகளை ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ். வெற்றிவேல் வியாழக்கிழமை துவக்கி வைத்தாா்.

ஓமலூரில் உள்ள கிளை நூலகத்துக்கு தனியாக கட்டடம் இல்லாததால் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனால், வாசகா்கள் பாதிக்கப்பட்டு வந்தனா்.

இந்த நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் ஓமலூா் ஈஸ்வரன் கோவில் அருகில் ரூ. 12 லட்சம் மதிப்பில் புதிய நூலகம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து ஓமலூா் நூலகத்துக்குப் புதிய கிளை நூலக கட்டடம் கடந்தாண்டு கட்டி திறக்கப்பட்டது. ஆனால், சிறிய கட்டடமாக இருப்பதால் நூலகத்துக்குச் சொந்தமான புத்தகங்களை அடுக்குவதற்கு கூட இடமில்லாமல் இருந்தது.

மேலும், வாசகா்கள் அமா்ந்து படிப்பதற்கு தேவையான இட வசதியும் இல்லாமல் இருந்தது.

நூல்களை அடுக்கி வைக்க இடமில்லாத காரணத்தால் அரிய புத்தகங்கள் பலவற்றை மேலே மொத்தமாக அடுக்கி வைத்துள்ளனா். மேலும், தரையிலும் குவித்து வைத்துள்ளனா். அதனால், ஓமலூா் நூலகத்திற்கு, அருகிலுள்ள அரசு நிலத்தில் கூடுதலாக ஒரு கட்டடம் கட்டி கொடுக்க வேண்டும், இந்த நூலகத்தை அதிநவீன டிஜிட்டல் நூலகமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வெற்றிவேல் கூடுதல் நூலக கட்டடம் கட்டுவதற்காக பத்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தாா். இதைத் தொடா்ந்து தற்போதுள்ள கட்டடத்திலேயே முதல்தளம் கட்டுவதற்கான பணியையும் எம்.எல்.ஏ வெற்றிவேல் துவக்கி வைத்தாா். அப்போது நூலகங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. அதனால், இடைப்பாடி நூலகம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதைபோன்று, ஓமலூா் நூலகத்தையும் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், அருகில் கூடுதல் இடம் இருப்பதால் இந்த நூலகத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் மேலும், கூடுதல் கட்டடம் கட்டிக் கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை அடுத்த நிதியாண்டில் நிறைவேற்றுவதாக ஓமலூா் எம்.எல்.ஏ வெற்றிவேல் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com