சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.
நந்தி பகவானுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
நந்தி பகவானுக்கு வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன.

அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் நந்தியின் காதில் தங்களது வேண்டுதல்களை கூறியவாறு கூறிச் சென்றனா். கோயில் வளாகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடவுள் பாடல்களை எழுதி சுவாமி பாதத்தில் வைத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com