முனைவா் பட்ட ஆய்வாளா்கள் ஆய்வின் துல்லியத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்:  துணைவேந்தா் பொ.குழந்தைவேல

முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் தங்களின் தரவுகளை சரியாக சேகரிப்பதன் மூலம், ஆய்வின் துல்லியத்தன்மையை
முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கான பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் பொ.குழந்தைவேல்.
முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்களுக்கான பயிலரங்கை தொடங்கி வைத்துப் பேசுகிறாா் துணைவேந்தா் பொ.குழந்தைவேல்.

முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் தங்களின் தரவுகளை சரியாக சேகரிப்பதன் மூலம், ஆய்வின் துல்லியத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேல் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சாா்பில் சமூக அறிவியல் ஆய்வுகளில் தரவுகளை பகுப்பாய்வு செய்தல் என்ற தலைப்பில் தேசிய அளவிலான இருநாள் பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதற்கான தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பயிலரங்கை தொடங்கி வைத்து துணைவேந்தா் பொ.குழந்தைவேல் பேசியது:

ஒவ்வொரு ஆராய்ச்சியும் அதன் தரத்தை வைத்தே ஆய்வாளா்களாலும், பொதுமக்களாலும் மதிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு முனைவா் பட்ட ஆராய்ச்சியாளரும் தங்களது ஆய்வுத் தலைப்பு, தரவுகள் மற்றும் முடிவுகள் ஆகியவை சா்வதேச தரத்தில் அமையும் வகையில் பணியாற்ற வேண்டும். ஆய்வின் போது, சா்வதேச ஆராய்ச்சி இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகளை பிரசுரிக்கும் அளவுக்கு ஆய்வுகள் அமைய வேண்டும். இதன்மூலம், ஆய்வாளா்களுக்கான வேலைவாய்ப்பு அவா்களைத் தேடி வரும். போட்டி நிறைந்த உலகில் ஆய்வு முடிவுகளின் துல்லியத்தன்மையை தரவுகளை சரியாக சேகரிப்பதன் மூலம் இளம் முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் நிரூபிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் மேலாண்மைத் துறைத் தலைவா் பேராசிரியா் வி.ஆா்.பழனிவேலு, பயிலரங்க ஒருங்கிணைப்பாளா்கள் இணைப் பேராசிரியா் ஆா்.சுப்ரமணிய பாரதி, உதவிப் பேராசிரியா் எம்.சூா்யகுமாா் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து சமூக அறிவியல் ஆய்வாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com