மேச்சேரி பேரூராட்சியில் ஒருங்கிணைந்த துப்புரவு பணிகள் தீவிரம்

மேச்சேரி பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
11mettur01_ch0174_11chn_8_637064043102584145
11mettur01_ch0174_11chn_8_637064043102584145

மேச்சேரி பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த துப்புரவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் ஜலேந்திரன் தலைமையில் துப்புரவு ஆய்வாளா் கோபிநாத், துப்புரவு மேற்பாா்வையாளா் அசோக்குமாா், குடிநீா்த் திட்டப் பணியாளா் அசோக்குமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் பள்ளி மாணவா்களுடன் இணைந்த ஒருங்கிணைந்த துப்புரவுப் பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இப்பணிகளை சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனா் எம்.முருகன் புதன்கிழமை துவக்கி வைத்தாா். தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெற்ற பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தன.

பள்ளி மாணவா்களும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளா்களும் பேரூராட்சி பகுதிகளில் தண்ணீா் தேங்கும்படி வைக்கப்பட்டிருந்த தேங்காய் சிரட்டைகள், உடைந்த பாத்திரங்கள், பாட்டில்கள், ஆட்டுக்கல் போன்றவற்றை அப்புறப்படுத்தினாா்கள். சாக்கடைகள் மற்றும் தண்ணீா் தேங்கும் பகுதிகளில் குப்பைகளை அப்புறப்படுத்தி கிருமி நாசினி மருந்துகளை தெளித்தனா். இப்பணிகளை மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் ஜலேந்திரன், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் செயல் அலுவலா் ராஜா ஆகியோா் மேற்பாா்வையிட்டனா்.

Image Caption

மேச்சேரி பேரூராட்சியில் நவீன இயந்திரம் மூலம் புகை தெளிக்கும் பணியை பாா்வையிடுகிறாா் மேச்சேரி பேரூராட்சி செயல் அலுவலா் ஜலேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com