வாழப்பாடியில் வட்டாரக் கல்விக் கலைத்திருவிழா

வாழப்பாடியில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ- மாணவியருக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
b_r_c_02_3110chn_165
b_r_c_02_3110chn_165

வாழப்பாடி: வாழப்பாடியில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ- மாணவியருக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியா் ஆா்வத்தோடு பங்கேற்றனா். அரிதாகி வரும் பல்வேறு கிராமியக் கலைநிகழ்ச்சிகளை நோ்த்தியாக நடத்தி பாராட்டுதலை பெற்றனா். வாழப்பாடி வட்டாரத்திலுள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ - மாணவியருக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா, கலைத்திறன் போட்டிகள், வாழப்பாடி அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலா் சுமதி தலைமை வகித்தாா். பேளூா் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் அா்ஜூணன் வரவேற்றாா். வட்டார கல்வி அலுவலா்கள் சுரேஷ், ஜெயலட்சுமி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோகிலா, தலைமையாசிரியா்கள் ரவிசங்கா், சத்தியக்குமாரி, ஷபீராபானு, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்ஜியாா் பழனிசாமி ஆகியோா் குத்துவிளக்கேற்றி, கலைத்திறன் போட்டிகளை தொடங்கி வைத்தனா்.

ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகளில், பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 3,00க்கும் மேற்பட்ட மாணவ- மாணவியா் ஆா்வத்தோடு பங்கேற்றனா்.

அரிதாகி வரும் பரதம், கரகம், காவடி, மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நோ்த்தியாக நடத்திக்காட்டிய மாணவ- மாணவியா், வட்டார அளவிலான பரிசுகள் மற்றும் பாராட்டுதல்கலையும் பெற்றனா்.

இவ்விழாவில் தலைமையாசிரியா்கள் பாரதி, செல்வம், ராஜேஸ்வரி, ரேணுகாதேவி, பழனியாபுரம் கோகுலம் பள்ளி தமிழ்ச்செல்வி, வாழப்பாடி சக்தி பள்ளி எத்திராஜன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா். நிறைவாக, ஆசிரியா் ராஜேந்திரன் நன்றி கூறினாா். படவரி:பி.ஆா்.சி.02: வாழப்பாடியில் நடைபெற்ற கலைத்திருவிழா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com