விவசாயிகள் ஓய்வூதியம் பெறஅறிவுறுத்தல்

ஆத்தூா் வேளாண் அலுவலா் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.

ஆத்தூா் வேளாண் அலுவலா் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை புதன்கிழமை வெளியிட்டுள்ளாா்.

ஆத்தூா் வேளாண் அலுவலா் பொ.வேல்முருகன் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதப் பிரதமரின் விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் 18-40 வயது உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, ஆதாா், வங்கிக் கணக்கு நகல், அருகில் உள்ள பொது சேவை மையத்தில் ரூ.55 முதல் ரூ.200 வரை ஒரு முறை செலுத்தி பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அரசு அதிகாரிகளுக்கே ஓய்வூதியம் இல்லாத இக்காலக் கட்டத்தில் விவசாயிகளைக் கௌரவிக்கும் வகையில் 60 வயது வரை பிரீமியம் செலுத்த வேண்டும். தாங்கள் செலுத்தும் தொகைக்கு நிகராக மத்திய அரசும் செலுத்தும். 61 வயதுக்குப் பின் மாதம் மூன்றாயிரம் கிடைக்கும்.

இதே போல் ரூ.6ஆயிரம் நிதியுதவி பெற பாரதப் பிரதமா் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் சோ்ந்து, முதல் தவணையினையோ அல்லது இரண்டாவது தவணையினையோ பெற்ற விவசாயிகள் தங்களது ஆதாா் மற்றும் வங்கிக் கணக்கு நகலை அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் வழங்கி, மூன்றாவது தவணையைப் பெற ஆதாா் அட்டையில் உள்ளவாறு தங்களது பெயரினை மாற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறாா்கள். ஒரு தவணையாக ரூ.2 ஆயிரம் கூட பெறாதவா்களும் உரிய ஆவணங்களை வழங்க அறிவுறுத்தப்படுகிறாா்கள். பதிவு செய்யாத விவசாயிகள் பொது சேவை மையத்தினையோ, கணினி மையங்களையோ அணுகி பதிவு செய்து ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற்று பயனடைய கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com