வாழை இலை விலை உயர்வு

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகூர்த்த தினங்களையொட்டி வாழை இலை விலை உயர்ந்துள்ளது.

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முகூர்த்த தினங்களையொட்டி வாழை இலை விலை உயர்ந்துள்ளது.
 தம்மம்பட்டி, கெங்கவல்லி, தெடாவூர், வீரகனூர், ஒதியத்தூர், நடுவலூர், செந்தாரப்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, செங்காடு, பெரப்பன்சோலை, மாவாறு, உலிபுரம், கொண்டையம்பள்ளி, செங்கக்கட்டு, பாலக்காடு, நரிப்பாடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள், அதிகளவில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். பிளாஸ்டிக் தடையால் திருமண மண்டபங்கள், உணவகங்களில் வாழை இலைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், வாழைத்தார்களை விட, வாழை இலை அதிக விலைக்கு விற்பனையாகிறது. வறட்சியினாலும், தேவை அதிகரித்ததாலும், வாழை இலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், தம்மம்பட்டியில் உள்ள வாழை மண்டிகள் மற்றும், தினசரி சந்தைகளில் டிபன் இலை ஒன்று ரூ.2 முதல் 3 வரையும், சாப்பாடு இலை ரூ. 4 இருந்து ரூ.6 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
 தொடர்ந்து மூன்று மாதங்கள் கல்யாணம், காதுக் குத்து, கோயில் கும்பாபிஷேக விழா போன்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெறும் என்பதால் வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு நாளுக்கு நாள் விலை அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது, டிபன் இலை ரூ. 3 முதல் ரூ. 5 ஆகவும், சாப்பாடு இலை ரூ. 6 முதல் ரூ. 8 - 9 வரையில் விலை அதிகரித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com