ஆவின் பாலை அதிக விலைக்கு விற்கும் முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் உரிமம் ரத்து செய்யப்படும்: ஆவின் பொது மேலாளர்

ஆவின் பாலை அதிக விலைக்கு விற்கும் முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உரிமம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என

ஆவின் பாலை அதிக விலைக்கு விற்கும் முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உரிமம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என சேலம் ஆவின் பொது மேலாளர் சி.விஜய்பாபு எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமானது ஓர் கூட்டுறவு நிறுவனமாகும். பொது மக்களின் நன்மையை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் தரமான பாலை "ஆவின்' என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து வகையான ஆவின் பால் விலை ஒரு லிட்டருக்கு ரூ.6 உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 நிலைப்படுத்திய பால் 250 மி.லி. ரூ.12-க்கும், 500 மி.லி. ரூ.23.50-க்கும், முழு கொழுப்பு செறிந்த பால் 500 மி.லி. ரூ.26-க்கும், 1 லிட்டர் ரூ.51-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பால் விலை உயர்வினை பயன்படுத்தி ஒரு சில ஆவின் பால் விற்பனை முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பாலை அதிக விலைக்கு பொது மக்களுக்கும், மளிகைக் கடைகளுக்கும் விற்பனை செய்து வருவதாக பொது மக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்ட வண்ணம் உள்ளன.
 பொதுமக்களுக்கு சரியான விலையில் ஆவின் பாலை விற்காமல் அதிக விலைக்கு விற்கும் முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் உரிமம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும். மேலும் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் அதிக விலை கொடுக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com