கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி தொடக்கம்

சேலத்தில் விஜயதசமியை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

சேலத்தில் விஜயதசமியை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்புக் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.
 நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையையொட்டி தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக்கழகம் சார்பில் சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 இதை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரா. திவாகர் தொடக்கி வைத்தார். கண்காட்சியில் அஷ்டலட்சுமி, செட், தசாவாதார செட், கல்யாண செட், கார்த்திகை செட், வேலை செய்யும் பெண் செட் உள்ளிட்ட பல கருத்துகளில் செட் பொம்மைகளும், தனி பொம்மைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பொம்மைகள் குறைந்தபட்சமாக ரூ. 15 முதல் ரூ.7 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகின்றன.
 மேலும் அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. நிகழ் ஆண்டு ரூ. 20 லட்சம் வரை கொலு பொம்மைகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என கழக மேலாளர் பி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com