சேலம் மாவட்டத்தில் 190 மி.மீ. மழைப் பதிவு

சேலம் மாவட்டத்தில் 190 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 190 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
 பருவமழைத் தொடங்கிய நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையும் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சேலம் மாநகரில் அம்மாப்பேட்டை கிச்சிப்பாளையம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். இதேபோல் ஏற்காடு, ஆத்தூர், எடப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதைத்தொடர்ந்து திங்கள்கிழமை மாலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
 மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்):
 ஆணைமடுவு-47, ஓமலூர்-38, ஏற்காடு-24, எடப்பாடி-24, ஆத்தூர்-12.4, சேலம்-10.4, காடையாம்பட்டி-10, மேட்டூர்-6.2, பெத்தநாயக்கன்பாளையம்-6, சங்ககிரி-4.4, தம்மம்பட்டி-3, கரியகோயில்-2, வீரகனூர்-2, வாழப்பாடி-0.5 என மொத்தம் 190 மி.மீ. மழைப் பதிவாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com