சேலம்-கோவை பயணிகள் ரயில் 21, 24-ஆம் தேதிகளில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரயில் வரும் 21, 24-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம்-கோவை பயணிகள் ரயில் வரும் 21, 24-ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:  சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட திருப்பூர் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால்,  அவ்வழியே இயங்கும் சில ரயில்கள் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், சேலம்-கோவை பயணிகள் ரயில் (66603) வியாழக்கிழமை மற்றும் வரும் 21, 24-ஆம் தேதிகளில் ஒரு பகுதியாக சேலம்-ஊத்துக்குளி இடையே ரத்து செய்யப்படுகிறது.
ஊத்துக்குளியில் இருந்து கோவைக்கு இயக்கப்படும்.  மறுமார்க்கத்தில் கோவை-சேலம் பாசஞ்சர் ரயில் (66602) 21, 24-ஆம் தேதிகளில் ஊத்துக்குளி-சேலம் இடையே ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.  கோவையில் இருந்து ஊத்துக்குளி வரை மட்டும் இயக்கப்படும். இத் தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com