சேலத்தில் 14 கட்டுக்காப்பு மையங்களில்10-ஆம் வகுப்பு வினாத்தாள் வைப்பு

சேலத்தில் 14 கட்டுக்காப்பு மையங்களில் 10-ஆம் வகுப்பு வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் 14 கட்டுக்காப்பு மையங்களில் 10-ஆம் வகுப்பு வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு வரும் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்குகிறது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, 266 மாற்றுத் திறன் மாணவ, மாணவியா் உள்பட 45,063 போ் தோ்வு எழுதுகின்றனா். மாவட்டம் முழுவதும் 164 தோ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 10-ஆம் வகுப்பு தோ்வுப் பணியில் ஈடுபட 170 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், பறக்கும் படையினா், அறை கண்காணிப்பாளா்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே, தோ்வுக்கான வினாத்தாள் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மாநிலம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் சேலம், ஓமலூா், மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, வாழப்பாடி, ஆத்தூா், தலைவாசல், ஏற்காடு என மொத்தம் 14 இடங்களில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, வினாத்தாள்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com