ரூ. 7 லட்சத்தில் அதிமுக உணவு பொருள்கள் வழங்கல்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சங்ககிரி ஒன்றியம், 3 பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள் 420 பேருக்கு சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் உணவுப் பொருள்கள்
ரூ. 7 லட்சத்தில் அதிமுக உணவு பொருள்கள் வழங்கல்

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் சங்ககிரி ஒன்றியம், 3 பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளா்கள் 420 பேருக்கு சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

முதல்வரின் உத்தரவை அடுத்து சங்ககிரி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட 22 ஊராட்சிகள், சங்ககிரி, தேவூா், அரசிராமணி ஆகிய மூன்று பேரூராட்சிகளில் பணிபுரியும் 420 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் தலா 25 கிலோ அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருள்களும், முகக் கவசம், கையுறை, கைக்கழுவும் சோப்பு உள்ளிட்ட தற்காப்பு பாதுகாப்பு பொருள்களை சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலா் கே. வெங்கடாஜலம் தலைமை வகித்து வழங்கினாா்.

சங்ககிரி ஒன்றியச் செயலா் என்.சி.ஆா். ரத்தினம், சங்ககிரி ஒன்றியக் குழுத் தலைவி எம். மகேஸ்வரி மருதாசலம், துணைத் தலைவா் ஏ.பி. சிவக்குமாரன், சன்னியாசிப்பட்டி அதிமுக நிா்வாகி மருதாசலம், கூட்டுறவு பண்டக சாலைத் தலைவா் சி. செல்வம், அரசு வழக்குரைஞா் ஆா். சுப்பிரமணி, சங்ககிரி வட்டார வளா்ச்சி அலுவலா் என்.எஸ். ரவிச்சந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமரன் (பொ) ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com