ஆத்தூரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.
ஆத்தூரில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 100க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர்.

நாட்டில் கரோனா வைரஸ்  தொற்றால் ஊரடங்கு அமலில் உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசிடமிருந்து ஆணை பெறுவதற்குள் தாங்களாக நடந்தும், இருச்சக்கர வாகனத்திலும் சென்றுள்ளனர்.

மீதமுள்ள 6 பேரை ஆத்தூர் வட்டாட்சியர் பிரகாசம், வருவாய் ஆய்வாளர் சேகர் ஆகியோர் காலை மதியம் இரவு உணவு மற்றும் குடிநீர் வழங்கி வழியனுப்பினார்கள். செவ்வாய்க்கிழமை மாலை கோவையில் இருந்து சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது.

அந்த இரயில் சேலத்திற்கு இரவு வருகிறது. அதில் அனுப்பி வைக்க ஆத்தூரில் இருந்து கார் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். வெளி மாநிலத்தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com