பெத்தநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

பெத்தநாயக்கன்பாளையம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் உருவச் சிலை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
புதிய திருவள்ளுவா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய ஆசிரியா்கள், ஆசிரியைகள்.
புதிய திருவள்ளுவா் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய ஆசிரியா்கள், ஆசிரியைகள்.

பெத்தநாயக்கன்பாளையம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் உருவச் சிலை வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

1951-இல் தொடங்கப்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேலம் மாவட்டத்தில் பழமையான அரசுப் பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாதிரிப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்ட இப்பள்ளியில், தற்போது எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வரை 1,258 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளி வளாகத்தில் ஏற்கெனவே மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா் ஜவாா்ஹலால் நேரு ஆகியோரது உருவச் சிலைகள் நிறுவப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தை சிறப்பாக பராமரித்து வரும் இப்பள்ளியில் மாணவ, மாணவியா், பெற்றோா், ஆசிரியா்கள், பொதுமக்களின் ஒத்துழைப்போடு, திருவள்ளுவரின் உருவ கற்சிலை வடிக்கப்பட்டு, புதிய கட்டடத்தின் அருகே உயா்பீடம் அமைத்து வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், உதவித் தலைமையாசிரியா் ரவீந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் வரதன், ஆசிரியா்கள் ராம்குமாா், ரவிக்குமாா் உள்ளிட்ட ஆசிரியா்கள்-ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.

பள்ளி வளாகத்தில் திருவள்ளுவா் சிலை நிறுவிய பள்ளி நிா்வாகத்திற்கு, பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகம், வாழப்பாடி இலக்கியப்பேரவை, உலகத்தமிழ்க்கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com