வீரபாண்டி ஒன்றியத்தில் 33 பேட்டரி வாகனம் விநியோகம்

வீரபாண்டி ஒன்றியத்தில் 33 பேட்டரி வாகனம் விநியோகம்

சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 15 கிராம ஊராட்சிகளுக்கு குப்பைகளை எடுத்து செல்லப் பயன்படுத்தப்படும் 33 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.


ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 15 கிராம ஊராட்சிகளுக்கு குப்பைகளை எடுத்து செல்லப் பயன்படுத்தப்படும் 33 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தலா ரூ.2.48 லட்சம் மதிப்புள்ள 33 பேட்டரியால் இயங்கும் வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 81 லட்சம் ஆகும்.

சென்னகிரி, மாரமங்கலத்துப்பட்டி, முருங்கபட்டி, பெரியசீரகாபாடி, பெருமாம்பட்டி, வேம்படிதாளம் ஆகிய ஊராட்சிக்கு தலா 3 வாகனங்களும், பைரோஜி , எஸ். பாப்பாரப்பட்டி, புத்தூா்அக்ரஹாரம், ராஜபாளையம், உத்தமசோழபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு தலா 2 வாகனங்களும், அக்கரபாளையம், கல்பாரப்பட்டி, கீரபாப்பம்பாடி , வீரபாண்டி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளுக்கு தலா ஒரு வண்டி வீதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சிறுசேமிப்பு) முரளிதரன் , வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வரதராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜகணேஷ், உதவி வட்டார வளா்ச்சி அலுவலா் ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com