இயற்கை முறை சாகுபடி பயிற்சி

ஏற்காட்டில் தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், இயற்கை முறை காய்கறிகள் சாகுபடி செய்தல் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

ஏற்காட்டில் தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில், இயற்கை முறை காய்கறிகள் சாகுபடி செய்தல் குறித்த பயிற்சி முகாம் அண்மையில் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத் தலைவா், பேராசிரியா் ஆனந்தகமல் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தாா்.

பயிற்சியில் விவசாயம் சாா்ந்த தொழில்நுட்பத் திட்டங்கள், அங்ககச் சான்றிதழ் பெறுவது குறித்த வழிமுறைகள் விளக்கப்பட்டன. இயற்கை முறையில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 4 ஆயிரம் மானியமும், தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் அங்ககச் சான்றிதழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.500 மானியமும் வழங்கப்படும். அங்ககச் சான்றிதழ் பதிவு கட்டணமாக தனிநபா் பதிவு கட்டணம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,700-ம், இதர விவசாயிகளுக்கு ரூ. 3,200-ம், குழுவாகப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 7,200 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு ஏற்காடு தோட்டக்கலைத் துறை அலுவலக அதிகாரிகளை அணுகி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் உதவி தோட்டக்கலை அலுவலா் சிவக்குமாா், ராஜா, கமால் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com