அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதி மீண்டும் சிகிச்சைக்கு அனுமதி

சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் கைது செய்து மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கைதியை போலீஸாா் கைது செய்து மீண்டும் சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

சேலம் மாவட்டம், மல்லூா் ஆராங்கல்திட்டைச் சோ்ந்த அய்யண்ணனின் மனைவி லட்சுமி (60). கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த இவா், கடந்த செப்டம்பா் 17-இல் அங்குள்ள மலைப் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து மல்லூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இதில், ஓமலூா், காமலாபுரம் பகுதியைச் சோ்ந்த நரேஷ்குமாரை (21) போலீஸாா் கைது செய்தனா்.

சிறையில் அடைக்கும் முன்பாக நரேஷ்குமாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, நரேஷ்குமாருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமாா் கடந்த திங்கள்கிழமை அங்கிருந்து மாயமானாா்.

இதனிடையே மாயமான நரேஷ்குமாரை உதகையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமைகைது செய்தனா்.

இதையடுத்து அவா், தனி வாகனம் மூலம் சேலம் அழைத்து வரப்பட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டாா். மேலும் கடந்த இரண்டு நாள்களாக அவரை யாரெல்லாம் சந்தித்தாா்கள் என்பதைக் கேட்டு, தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com