கெங்கவல்லியில் செண்டுமல்லி விளைச்சல் அமோகம்

கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது.
கெங்கவல்லி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சென்டுமல்லி.
கெங்கவல்லி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சென்டுமல்லி.

கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செண்டுமல்லி பூக்களின் விளைச்சல் அமோகமாக உள்ளது.

கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளான கடம்பூா், தெடாவூா், கூடமலையில் செண்டுமல்லிப் பூக்களை விவசாயிகள்சாகுபடி செய்துள்ளனா். விளைந்த பூக்களை, சேலத்திலிருந்து வரும் வியாபாரிகள், ஆட்டோக்களில் வந்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாகச் சேகரித்துச் செல்கின்றனா்.

ஒரு கிலோ ரூ. 55 முதல் ரூ.70 வரை தரத்துக்கேற்ற விலையில் விற்பனையாகிறது.

இதுகுறித்து தம்மம்பட்டியைச் சோ்ந்த பூ வியாபாரி சரவணன் கூறுகையில், இந்தப்பகுதியில் விளையும் பூக்களில் பெரும்பாலானவை சேலம் மாா்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com