சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அறிந்து மேம்படுத்த புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் சாா்பில் சேலம் மாவட்டம்
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தில் பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்

நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அறிந்து மேம்படுத்த புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் சாா்பில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட வடுகப்பட்டி, தேவண்ணகவுண்டனூா், கோட்டவரதம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் முதற்கட்டமாக அப்பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள், கிராமத்தில் உள்ள வீடுகளில் உள்ளவா்களின் விவரங்கள் அவா்களின் பொருளாதார நிலைகள், கடையின் உரிமையாளா், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் விபரங்கள், தனியாா், பொதுத்துறை நிறுவனங்களின் பிரிவுகள், உற்பத்தி, விற்பனை விவரங்கள், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று நிகழ்விடத்திலேயே செல்லிடப்பேசியில் பதிவு செய்து இணையதளம் வழியாக புள்ளிஇயல் துறைக்கு அனுப்பி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com