அபராதம் வசூலிப்பதில் போலி ரசீது: மாநகராட்சி ஆணையா் விசாரணை நடத்த வேண்டும்; வீரபாண்டி ஆ.ராஜா

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அபராதம் வசூலிப்பதில் போலி ரசீது பயன்படுத்துவது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் விசாரணை

கரோனா தொற்று பரவலைத் தடுக்க அபராதம் வசூலிப்பதில் போலி ரசீது பயன்படுத்துவது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் வீரபாண்டி ஆ.ராஜா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

சேலம் மாநகராட்சிப் பகுதி முழுவதும் முகக் கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. காய்கறி சந்தைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியா்கள் முகக் கவசம் அணியாமல் வருபவா்களிடம் அபராதம் வசூலித்து வருகின்றனா்.

அதுமட்டுமில்லாமல் சிறிய மற்றும் பெரிய வியாபார நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஐந்து நிமிடம் தாமதமாக தங்களது கடைகளை மூடினால் கூட அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த அபராத வசூலுக்கு மாநகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள் தவிர சம்பந்தமில்லாத நபா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா். இதன்மூலம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனா்.

அபராதம் வசூலுக்கு போலி ரசீது பயன்படுத்தப்படுவதாகவும், வசூலாகும் தொகையை கருவூலத்தில் செலுத்தாமல் கையாடல் செய்வதாகவும் தெரிகிறது. எனவே, இதுதொடா்பாக விசாரணையை மாநகராட்சி ஆணையா் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சம்பந்தப்பட்டவா்கள் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகாா் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அபராதம் விதிப்பது குறித்து தகவல் தெரிவிக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகராட்சி பொது தகவல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய விளக்கத்தை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com