கரோனா நோய்த்தொற்றிலிருந்து விடுபட வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண் பக்தர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும், கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபவும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும், எடப்பாடி அருகே
மண்சோறு சாப்பிடும் பெண் பக்தர்கள்
மண்சோறு சாப்பிடும் பெண் பக்தர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும், கரோனா நோய்த்தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபவும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும், எடப்பாடி அருகே பெண் பக்தர்கள் அம்மன் ஆலயத்தில் மண்சோறு சாப்பிட்டனர். 

எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் பிரசித்தி பெற்ற புதுப்பேட்டை மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ் ஆலயத்தில் வாரந்தோறும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளிலும், அமாவாசசை மற்றும் பவுர்ணமி தினங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம், தற்போது பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்தினுள் அனுமதிக்கப்பட்டு வருகிறன்றனர். 

இந்நிலையில் திங்கள் அன்று இரவு நடைபெற்ற பவுர்ணமி பூஜையில், மாரியம்மன் வழிபாட்டு மன்ற பெண்பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அம்மனுக்கு, பால், பழச்சாறு, இளநீர், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில்,  பட்டாடை உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

அம்மனை போற்றி பாடல்கள் பாடி வழிபாடு செய்த பெண்பக்தர்கள், தற்போது உல மக்களை அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்று நீங்கிடவும், தற்போது தொடங்கியுள்ள பருவ காலத்தில் நாடு முழுவதும் நல மழைபெய்து, விவசாயம் செழித்திட வேண்டியும், பெண் பக்தர்கள் ஆலய வளாகத்தில் மண் சோறு சாப்பிட்டனர். இதனால் அம்மன் அருள் நிச்சசையம் கிடைத்திடும் என தாங்கள் நம்புவதாக பக்தர்கள் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com