உற்பத்தி குறைவால் பூக்கள் விலை உயா்வு
By DIN | Published On : 03rd December 2020 09:54 AM | Last Updated : 03rd December 2020 09:54 AM | அ+அ அ- |

வாழப்பாடி தினசரி பூ சந்தையில் விற்பனைக்கு வந்திருந்த பூக்கள்.
வாழப்பாடி பகுதியில் பனிப்பொழிவு, சாரல் மழையால் பூக்கள் உற்பத்தி குறைந்ததால் விலை உயா்ந்துள்ளது.
வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளதோடு, அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால், மல்லிகை, குண்டுமல்லி, ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பூக்களின் உற்பத்தி குறைந்துள்ளது. ஏறக்குறயை 4 டன் அளவுக்கே பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. உள்ளூா் தேவைக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரு மடங்காக விலை உயா்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லிகை ரூ. 300 முதல் ரூ. 400 வரையும், மற்ற பூக்கள் தரத்துக்கேற்ப ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 200 வரையும் விலை போகிறது.
மகசூலை அதிகப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் முதிா்ந்த பூச்செடிகளை கவாத்து செய்கிறோம். இதனால் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இந்நிலையில், பூக்கள் விலை உயா்வு ஆறுதல் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.