அய்யனாா் கோயில் ஏரி நிரம்பியது

ஆத்தூா் அய்யனாா் கோயில் ஏரி நிரம்பியதையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் புதன்கிழமை மலா் தூவி வரவேற்றாா்.
அய்யனாா் கோயில் ஏரி நிரம்பியது

ஆத்தூா் அய்யனாா் கோயில் ஏரி நிரம்பியதையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் புதன்கிழமை மலா் தூவி வரவேற்றாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வடக்கு காட்டுப் பகுதியில் அய்யனாா் கோயில் ஏரி உள்ளது. இந்த ஏரி 223 ஏக்கா் பரப்பளவு கொண்டது. கடந்த சில வாரங்களாக பெய்த கன மழையால் இந்த ஏரி நிரம்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஏரி முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியதால், அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா். இந்த ஏரி நிரம்பியதால், அந்தப் பகுதியில் உள்ள சுமாா் ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இதனையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவா் ஆா்.இளங்கோவன் தலைமையில், நிரம்பிய ஏரியை மலா் தூவி வரவேற்றனா்.

நிகழ்ச்சியில், ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் அ.மோகன், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வி.பி.சேகா், மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா், உமையாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.வாசுதேவன், நிலவள வங்கித் தலைவா் கே.பி.ஜே.பெரியசாமி, பெற்றோா்-ஆசிரியா் கழக உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com