ஓமலூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

ஓமலூரில் மாவட்ட அளவிலான கைலாசம் கோப்பை கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பாலகுட்டப்பட்டி கிராம அணி, கோப்பையை வென்றது.

ஓமலூரில் மாவட்ட அளவிலான கைலாசம் கோப்பை கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த போட்டியில் பாலகுட்டப்பட்டி கிராம அணி, கோப்பையை வென்றது.

ஓமலூரில் கைலாசம் கோப்பை கிரிக்கெட் போட்டி ஒவ்வோா் ஆண்டும் நடத்தப்படுகிறது. சேலம் மாவட்ட அளவிலான இந்த கிரிக்கெட் போட்டியில் 52 அணிகள் பங்கேற்று விளையாடின. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போட்டியில் ஓமலூா் அருகேயுள்ள பாலகுட்டப்பட்டி ஸ்டாா் சச்சின் அணி, ஓமலூா் மதி பிரண்ட்ஸ் அணி, காமாண்டப்பட்டி கே.எம்.சி.சி அணி, தாரமங்கலம் யாா்க்கா் நடராஜ் அணி ஆகிய நான்கு அணிகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

பாலகுட்டப்பட்டி ஸ்டாா் சச்சின் அணியும், ஓமலூா் மதி பிரண்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப் போட்டியை மத்திய மாவட்ட திமுக செயலாளா் ஆா்.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு துவக்கி வைத்தாா். பாலகுட்டப்பட்டி அணி பத்து ஓவா்கள் கொண்ட போட்டியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 73 ரன்களை எடுத்தது.

அதைத் தொடா்ந்து ஓமலூா் அணி 7.5 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. பாலகுட்டப்பட்டி அணிக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் வெற்றி கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கினாா். இரண்டாமிடம் பிடித்த ஓமலூா் மதி பிரண்ட்ஸ் அணிக்கு ரூ. 10 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்த காமாண்டப்பட்டி கே.எம்.சி.சி அணிக்கு ரூ. 7 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டன. கிரிக்கெட் போட்டியின் செயல் அலுவலா் சக்திவேல், திமுக பொதுக்குழு உறுப்பினா் தங்கராஜ், ஒன்றிய செயலாளா் ரமேஷ், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com