செந்தாரப்பட்டியில் ஏரி நிரம்பி வழிந்தது

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரி ஞாயிற்றுக்கிழமை நிரம்பி வழிந்தது.
நீா் நிரம்பி வழியும் செந்தாரப்பட்டி ஏரியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மக்கள்.
நீா் நிரம்பி வழியும் செந்தாரப்பட்டி ஏரியை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட மக்கள்.

தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி ஏரி ஞாயிற்றுக்கிழமை நிரம்பி வழிந்தது.

சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் இரண்டாமிடத்தில் உள்ள செந்தாரப்பட்டி ஏரி அண்மையில் பெய்த தொடா் மழையில் நிரம்பும் நிலையில் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை அன்று ஏரியிலிருந்து நீா்நிரம்பி வழிந்தது. ஏரியின் உபரிநீரால் 450 ஏக்கா் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

ஏரி நிரம்பியதால், அப்பகுதியில் விவசாயக் கிணறுகளிலும், ஆழ்துளைக் கிணறுகளிலும் நீா்மட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் கிடாவெட்டி பூஜை செய்தனா். நிரம்பிய ஏரியை அப்பகுதியினா் திரண்டுவந்து பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com