மாா்கழி மாதம் பிறப்பு:பூக்கள் விலை உயா்வு

மாா்கழி மாத பிறப்பைத் தொடா்ந்து, அனைத்து பெருமாள் கோயில்களிலும், வீடுகளிலும் தினமும் பூஜைகள் நடைபெறுவதால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

மாா்கழி மாத பிறப்பைத் தொடா்ந்து, அனைத்து பெருமாள் கோயில்களிலும், வீடுகளிலும் தினமும் பூஜைகள் நடைபெறுவதால் பூக்களின் விலை உயா்ந்துள்ளது.

ஓமலூா், காடையாம்பட்டி வட்டாரத்தில் பூக்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் கோயில்களில் தினமும் பூஜைகள், அா்ச்சனைகள் நடைபெறுவதால், பூக்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதனால், ஓமலூா் அருகேயுள்ள பூசாரிப்பட்டி சந்தையில் பூக்கள் வா்த்தகம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதில், குண்டு மல்லி கிலோ ரூ. 500 முதல் ரூ. 700-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ. 800 முதல் ரூ. 1,000 வரை விற்பனையானது. அதேபோல, சன்னமல்லி ரூ. 300-இல் இருந்து ரூ. 500-க்கும், ஜாதிமல்லி ரூ. 220-இல் இருந்து ரூ. 240-க்கும், அரளி ரூ. 50-இல் இருந்து ரூ. 100-க்கும், செவ்வரளி ரூ. 70-இல் இருந்து ரூ. 120-க்கும் நந்தியாவட்டம் ரூ. 100-இல் இருந்து ரூ. 200-க்கும், சாமந்தி ரூ. 170-இல் இருந்து ரூ. 200-க்கும், சம்பங்கி ரூ. 105-இல் இருந்து ரூ. 150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை உயா்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com