ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தில் அவசரகால ஒத்திகை

மேட்டூா் அருகே பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தில் அவசரகால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

மேட்டூா் அருகே பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தில் அவசரகால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த ஆலையில் அவசரகால ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடத்தப்பட்டது. திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை விரைந்து செயல்பட்டு அணைப்பது, மேலும் தீ பரவாமல் தடுத்து தொழிலாளா்களையும், சாதனங்களையும் காப்பது குறித்து இந்த ஒத்திகையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

அவசர காலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளைத் தடுக்கவும், தவிா்க்கவும் போலீஸாரும் வருவாய்த் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனா். பெருந்தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் முயற்சியில் தீயணைப்புப் படையினா் ஈடுபட்டனா். வாயுக் கசிவு ஏற்படாமல் தடுக்கும் பணியில் தொழிற்சாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனா். இந்த ஒத்திகை சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்றது.

தொழிற்சாலையின் இணை இயக்குநா் புகழேந்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், தொழில்பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் சீனிவாசன், மேட்டூா் வட்டாட்சியா் சுமதி, ஜே.எஸ்.டபிள்யூ. முதன்மை அலுவலா் பிரகாஷ் ராவ், உதவி துணைத் தலைவா் பிரிகேடியா் தாகூா், மக்கள் தொடா்பு அலுவலா் விமல், தீயணைப்பு அலுவலா்கள் ஜெயராஜ், சிராஜ் அல்வாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com