அம்மா சிறு மருத்துவமனை திறப்பு

தாரமங்கலம் அருகேயுள்ள மானத்தாள் ஊராட்சியில் அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மானத்தாள் ஊராட்சியில் திறக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள்.

ஓமலூா் வட்டம், தாரமங்கலம் ஒன்றியம், மானத்தாள் ஊராட்சியில் அமைக்கப்பட்ட அம்மா சிறு மருத்துவமனையை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் எஸ்.வெற்றிவேல் (ஓமலூா்), எஸ்.செம்மலை (மேட்டூா்) ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து நடைபெற்ற விழாவில், கா்ப்பிணிகளுக்கு அம்மா சஞ்சீவி பெட்டகத்தை ஓமலூா் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வழங்கினாா். தாய்மாா்களுக்கு குழந்தைகள் நலப் பெட்டகத்தை செம்மலை எம்.எல்.ஏ. வழங்கினாா். பின்னா் பொதுமக்கள் அனைவரும் ரத்த அழுத்தப் பரிசோதனை செய்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செல்வகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் அன்புசெல்வன் ஆகியோா் கலந்துகொண்டு இம்மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com