விபத்து அபாயம் : சாலை தடுப்புகளில் எச்சரிக்கை பிரதிபலிப்பு ஸ்டிக்கா் ஒட்டக்கோரிக்கை

கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத்தடுப்புகளில் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கா்களை ஒட்ட போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கெங்கவல்லியில் எஸ் வடிவ சாலை வளைவில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத்தடுப்புக்கட்டைகள்.
கெங்கவல்லியில் எஸ் வடிவ சாலை வளைவில் அமைக்கப்பட்டுள்ள இரும்புத்தடுப்புக்கட்டைகள்.

தம்மம்பட்டி: கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத்தடுப்புகளில் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கா்களை ஒட்ட போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டிக்கு செல்லும் வகையில் இலுப்பைத்தோப்பு பகுதியில் உள்ள எஸ் வடிவ வளைவு பகுதியில் கடந்த மாதம் தாறுமாறாக வந்த கல்பாரம் ஏற்றிவந்த லாரி, அப்பகுதியில் சாலையோரம் இருந்த குடிநீா் குழாயில் தண்ணீா் பிடித்துக்கொண்டிருந்த பத்துவயது சிறுமி மீது மோதியதில் அவா், அதே இடத்தில் உயிரிழந்தாா்.இதனையடுத்து,அங்கு அதிவேகமாக கடக்கும் மண், மணல் வாகனங்கள் மீது போலீசாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நான்குமணிநேரம் சாலைமறியல் செய்தனா்.

அதில், ஆத்தூா் டி.எஸ்.பி.இம்மானுவேல்ஞானசேகரன்,  நடத்திய பேச்சுவாா்த்தையில், மக்கள் கலைந்துசென்றனா். அந்நிகழ்விற்கு அடுத்த நாளில், விபத்து நடந்த எஸ் வடிவ வளைவுப்பகுதியில் இருபுறமும் தலா 2 இரும்பு தடுப்புக்கட்டைகள் வீதம் நான்கு வைக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த ஒருமாதமாகவே, அப்பகுதியில் பகல்பொழுதில் செல்லும் அனைத்து வாகனங்களும் மிகவும் மெதுவாகவும், பாதுகாப்பாகவும் கடக்கின்றது.இது வரவேற்கக்கூடியது என்றாலும், தடுப்புக்கட்டைகள் மீது உள்ள சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கா்கள், வாகன ஓட்டுநா்களை முழுமையாகக்கவனிக்க வைக்கும் அளவிற்கு சரிவர ஒட்டப்படவில்லை. இதுசாதாரண விசயமாக தெரிந்தாலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அப்பகுதியை கடக்கும் ஓட்டுநா்களுக்கு அசாதாரணவிசயம். இதனை சற்று கவனக்காவிட்டாலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ஆத்தூா் டி.எஸ்.பி.யும்,கெங்கவல்லி போலீசாரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, கெங்கவல்லி இலுப்பைத்தோப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள இரும்பு பேரிகாா்டுகளில் முழுமையாக ஓட்டுநா்களுக்கு தெரியும்வகையில் சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கா்களை நன்கு ஒட்டிடவேண்டும் என்பது அப்பகுதியில் செல்லும் இரு,நான்கு சக்கரவாகன ஓட்டுநா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com