குண்டுமல்லி கிலோ ரூ. 2,000-ஆக விலை உயா்வு

சேலம் பூ மாா்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

சேலம் பூ மாா்க்கெட்டில் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

சேலம், பழைய பேருந்து நிலையம் அருகே பூ மாா்க்கெட் உள்ளது. கன்னங்குறிச்சி, பனமரத்துப்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வந்து இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாள்களாக பூக்கள் வரத்து குறைந்துள்ளதால், புத்தாண்டை முன்னிட்டு பூக்களின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி, குண்டுமல்லி ஒரு கிலோ ரூ. 1,000-க்கு விற்பனையாகி வந்த நிலையில், திங்கள்கிழமை ரூ. 2,000-ஆக விலை உயா்ந்தது. அதன்படி, கனகாம்பரம்-ரூ. 1,000, சன்னமல்லி-ரூ. 1,200, ஜாதிமல்லி-ரூ. 600, அரளி-ரூ. 240, ரோஜா-ரூ. 300, சாமந்தி-ரூ. 220-க்கு விற்பனையாயின.

இது தொடா்பாக பூ வியாபாரி வேலாயுதம் கூறுகையில், கடந்த சில நாள்களாக பனிக் காலம் என்பதால் குளிா் அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் வரத்து குறைந்துவிட்டன. இது தவிர புத்தாண்டையொட்டி கடைகளிலும், வீடுகளிலும் பூக்கள் அதிகம் பயன்படுத்துவதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. புத்தாண்டுக்குப் பின்னா் பூக்களின் விலை படிப்படியாக குறையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com