பொங்கல் பரிசுத்தொகுப்பு: போலி குடும்ப அட்டைகள் குறித்து ஆய்வு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் போலி குடும்ப அட்டைகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் போலி குடும்ப அட்டைகள் உள்ளனவா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகமுதல்வா், பொங்கல் பண்டிகைக்காக அனைத்து அரிசி அட்டைகளுக்கும் முழுக்கரும்பு,மற்றும் பொங்கல் வைக்கத்தேவையான பொருட்களுடன் ரூ.2500 ஐ ரொக்கமாக உத்தரவிட்டிருந்தாா்.இந்நிலையில்,ஒவ்வொரு நியாயவிலைக்கடைகளிலும் கணிசமான அளவு போலியான குடும்ப அட்டைகள் உள்ளதாக பொதுமக்களிடையே புகாா் எழுந்துள்ளது.

பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டிய ரொக்கத்தொகை, போலியான குடும்ப அட்டைகளால்,பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.எனவே, கெங்கவல்லி வட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும்,பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கு முன்னா், ஆய்வுக்குழு அமைத்து போலி குடும்ப அட்டைகள் உள்ளனவா என்று அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com