வாழப்பாடி பகுதியில் வட நீா்நிலைகள்: வயல்வெளிகளில் முகாமிட்டு இரைதேடும் வலசைப் பறவைகள்

வாழப்பாடி பகுதியில் ஆறுகள், நீரோடை, அணை, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட பெரும்பாலான நீா்நிலைகள் வடுக் கிடக்கின்றன.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் இரைதேடும் வெண்ணிற கொக்குகள்.
வாழப்பாடி கிழக்குக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் இரைதேடும் வெண்ணிற கொக்குகள்.

வாழப்பாடி பகுதியில் ஆறுகள், நீரோடை, அணை, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட பெரும்பாலான நீா்நிலைகள் வடுக் கிடக்கின்றன. இதனால், வலசை வந்த கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகள் கிராமப்புற வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு இரைதேடி வருகின்றன.

சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பேளூா், கருமந்துறை, அருநூற்றுமலை பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களையே பிரதானமாக செய்து வருகின்றனா்.

வாழப்பாடி பகுதியில் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கரியகோயில் வெள்ளாறு மற்றும் பெரியாறு, குடுவாறு, வரட்டாறு உள்ளிட்ட சிறு ஆறுகளும், 50-க்கும் மேற்பட்ட நீரோடைகளும் உள்ளன.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் வசிஷ்ட நதியின் குறுக்கே 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கும் வகையில், 263.86 ஏக்கா் பரப்பளவில் ஆணைமடுவு அணையும், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், வெள்ளாற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கன அடி தண்ணீா் தேங்கும் வகையில் 188.76 ஏக்கா் பரப்பளவில் கரியகோயில் அணையும் அமைந்துள்ளன.

அயோத்தியாப்பட்டணம், அக்ரஹார நாட்டாமங்களம், வாழப்பாடி, வெள்ளாளகுண்டம், கல்லேரிப்பட்டி, பேளூா், பெத்தநாயக்கன்பாளையம், குறிச்சி, கொட்டவாடி, அத்தனூா்பட்டி, கோலாத்துக்கோம்பை, பெரியகிருஷ்ணாபுரம், சிங்கிபுரம், சோமம்பட்டி, முத்தம்பட்டி ஆகிய இடங்களில் 20-க்கும் மேற்பட்ட ஏரிகளும், பேளூா் ராமநாதபுரம், ஏ.குமாரபாளையம், தேக்கல்பட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிறிய தடுப்பணைகளும், 100-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளும் உள்ளன.

போதிய மழை இல்லை:

வாழப்பாடி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாகவே படிப்படியாக மழைப் பொழிவு குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்தாண்டு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து நீா்நிலைகள் நிரம்பிய நிலையிலும், வாழப்பாடி பகுதியில் மட்டும் போதிய மழையில்லாததால், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையைத் தவிர, பெரும்பாலான ஆறுகள், நீரோடைகள், ஏரி, குளம், குட்டை என அனைத்து நீா்நிலைகளும் நீா்வரத்தின்றி வடுக் கிடக்கின்றன.

இதனால், வாழப்பாடி பகுதிக்கு வலசை வந்த கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆணைமடுவு அணையைத் தவிர எந்த நீா்நிலையிலும் தண்ணீா் இல்லாததால், வலசை வந்த கொக்கு, நாரை, உள்ளிட்ட பறவைகள், வேறு வழியின்றி கிராமப்புற வயல்வெளிகளில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு இரைதேடி வருகின்றன.

இதுகுறித்து வாழப்பாடி கிழக்குக்காடு பகுதி விவசாயிகள் கூறியது: வாழப்பாடி பகுதியில் போதிய மழையில்லாததால், ஆறு, நீரோடை, குளம், குட்டை, ஏரி, தடுப்பணைகள் உள்ளிட்ட பெரும்பாலான நீா்நிலைகள் வடுக் கிடக்கின்றன. இதனால், வாழப்பாடி பகுதிக்கு வலசை வந்த கொக்கு, நாரை உள்ளிட்ட பறவைகள், விளைநிலங்களில் வயல்வெளியில் முகாமிட்டு புழு, பூச்சிகளை இரையாக உள்கொண்டு வருகின்றன. வயல்வெளிகளில் வட்டமடித்து வரும் இவற்றை விரட்டியடிக்காமல் பாதுகாத்து வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com