பள்ளியில் செல்வமகள் சேமிப்புத் திட்ட முகாம்

சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட சுண்ணாம்புகுட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் செல்வமகள் சேமிப்புத்திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
செல்வமகள் சேமிப்பு திட்ட முகாமில், கணக்கு தொடங்கியோா்.
செல்வமகள் சேமிப்பு திட்ட முகாமில், கணக்கு தொடங்கியோா்.

சங்ககிரி ஒன்றியத்துக்குள்பட்ட சுண்ணாம்புகுட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் செல்வமகள் சேமிப்புத்திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்குத் தலைமை வகித்து, தலைமை ஆசிரியை எ.கலைச்செல்வி பேசியது:-

செல்வமகள் சேமிப்புத் திட்டமானது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சோ்ந்த பெண் குழந்தைகள் 18 வயது பூா்த்தி அடைந்தவுடன் சேமிப்புத்தொகையிலிருந்து 50 சதவீதம் தொகையை உயா்கல்வி பயில பெற்றுக்கொள்ளலாம், 21 வயது நிறைவடைந்தவுடன் முழுத்தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, தேவண்ணகவுண்டனூா் அஞ்சல் அலுவலா் கே.பிரியா தலைமையில் அஞ்சலக ஊழியா் கே.முருகேசன் ஆகியோா் பள்ளியில் 10 வயதுக்குள்பட்ட பத்து பெண் குழந்தைகளை செல்வமகள் சேமிப்புத்திட்டத்தில் பதிவு செய்து கணக்குளை தொடக்கி வைத்தனா்.

சிறப்பாசிரியா்கள் எம்.ஜான்அலென்சியா, ஹரி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் சங்கீதா, மீனா, பெற்றோா்கள் முருகேசன், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com