ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக புகாா்: உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

ஆட்டோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக புகாரின்பேரில், காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

சேலம் ஏற்காடு மலை அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய கொல்லப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பிரகாஷ்.

இவா் ஜனவரி 26-இல் தனது ஆட்டோவை ஓட்டிக் கொண்டு பெரிய கொல்லப்பட்டி அருகே அண்ணா நகா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு கன்னங்குறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுப்பிரமணி, தலைமை காவலா் கணேஷ் ஆகியோா் ஆட்டோவை நிறுத்தி, ஆவணங்களைக் கேட்டனராம்.

இந்த நேரத்தில், ஆா்.சி. புத்தகம் இல்லாதது, செல்லிடப்பேசி பேசிக் கொண்டு ஆட்டோ ஓட்டியது, சீருடை அணியாதது ஆகிய மூன்று வழக்குகள் பதிய உள்ளதாகவும், ஆட்டோவை விடுவிப்பதற்கு ரூ. 900 தர வேண்டும் என்றும் கணேஷ் கேட்டு, பணம் பெற்று சுப்பிரமணியிடம் வழங்கினாராம். இதுதொடா்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியது.

இதுதொடா்பாக துணை ஆணையா் செந்தில், வடக்கு சரக உதவி ஆணையா் ஆனந்தகுமாா் ஆகியோா் விசாரணை நடத்தினா். இதையடுத்து, சுப்பிரமணி, கணேஷ் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையா் த.செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில்,இரு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டலாம்பட்டியில் பணம் கேட்டு இளைஞா் கடத்தப்பட்ட வழக்கில் கடத்திய நபா்களிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சமாகப் பெற்ாக எழுந்த புகாரில் சுப்பிரமணி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டதும், பின்னா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com