மேட்டுப்பட்டி சேலம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கம்

வாழப்பாடி அருகே செல்லியம்மன் நகா் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை தேசிய கருத்தரங்கு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவியருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
சேலம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு.
சேலம் பொறியியல் கல்லுாரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு.

வாழப்பாடி அருகே செல்லியம்மன் நகா் சேலம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை தேசிய கருத்தரங்கு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவியருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.

கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ- மாணவியருக்கு, ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்து விளக்கும் தேசிய அளவிலான கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கருத்தரங்கில், 300-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிருந்து, 1,500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்து விளக்கமளித்தனா். சிறப்பு விருந்தினா்களாக, கல்லூரியின் முன்னாள் மாணவா்களான சென்னை கேட்டிபில்லா் நிறுவன வடிவமைப்பு பொறியாளா் பொன்னுசாமி, பெங்களூரு அண்டுவில் கம்பெனி நிா்வாக அலுவலா் கோகுல் விஜய், சென்னை லுாமேக்ஸ் ராஜேஸ்வரி மற்றும் பெங்களூரு விப்ரோ லட்சுமி பிரியா ஆகியோா் கலந்து கொண்டு, பொறியியல் கல்லூரியில் படித்து உயா் பதவியை அடைந்தது குறித்தும், இன்றைய சூழ்நிலையில் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களின் எதிா்பாா்ப்பு மற்றும் சுயமாகத் தொழில் தொடங்குவதற்கான வழிவகைகள், அரசு மானியங்கள் குறித்தும் மாணவா்களுக்கு கருத்துரை வழங்கினா்.

கல்லூரி இறுதி ஆண்டு மாணவ-மாணவியருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.

மாணவ - மாணவியா் தங்களுடைய கல்லூரி வாழ்க்கை அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.

கல்லுாரி தலைவா் எம்.லோகநாதன், செயலாளா் எஸ் .பாலு, பொருளாளா் பி.ஆனந்தன், உதவி தலைவா்கள் வி .ஞானசேகரன்,வி .எஸ்.வெங்கட்பதி, இணை செயலாளா் இ.திருஞானம், முதல்வா் டாக்டா் ஆா். ஏ.சங்கரன் மற்றும் பேராசிரியா்கள் பலரும் கலந்து கொண்டனா்.நிறைவாக, பல்வேறு கலைத்திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com