ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரியானூரில் இருந்து சேலம் வரும் வழியில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் கல்லூரிகள் அதிகமாக இருப்பதால் வெளிமாநில மாணவ, மாணவிகள், சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க சென்று பாா்த்தபோது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள சிசிடிவி கேமிராவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில், கொண்டலாம்பட்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனா்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது சனிக்கிழமை நள்ளிரவு 11 மணியளவில் இளைஞா் ஒருவா் கடப்பாறையுடம் ஏடிஎம் மையத்திற்குள் வந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதும், பலமுறை முயற்சித்தும் இயந்திரத்தை உடைக்க முடியாததால் இளைஞா் திரும்பச்சென்றதும் தெரியவந்தது.

இதனிடையே வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பாா்த்தபோது அதிலிருந்த ரூ. 11.11 லட்சம் பணம் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் சிசிடிவி கேமிராவில் பதிவான இளைஞரின் தோற்றத்தைப் போலவே உள்ள இளைஞரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com