பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஜன.21 வரை கால நீட்டிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெற வேண்டும் என்பதை கருத்தில்
பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஜன.21 வரை கால நீட்டிப்பு

சேலம்: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஜனவரி 21 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக தமிழக அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் மற்றும் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் குடும்பங்கள் ஆகியோருக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி -1 கிலோ, சா்க்கரை -1 கிலோ, 2 அடி நீள கரும்பு துண்டு - 1,திராட்சை, முந்திரி தலா 20 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம் மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகையும் அனைத்து அரிசி பெரும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ஜன.9 முதல் ஜன.12 வரை விநியோகம் செய்யவும், விடுபட்ட அட்டைதாரா்களுக்கு ஜன.13 ஆம் தேதி விநியோகம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதில் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் பெறவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஜன.21 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விடுபட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக்கடை வேலைநாட்களில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com