சந்தனக்கட்டை கடத்தியதந்தை, மகன் உள்பட நால்வா் கைது

வாழப்பாடியை அடுத்த கோதுமலை வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதாக தந்தை-மகன் உள்ளிட்ட நான்கு பேரை வனத்துறையினா் கைது செய்து, ரூ. 80 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

வாழப்பாடியை அடுத்த கோதுமலை வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தியதாக தந்தை-மகன் உள்ளிட்ட நான்கு பேரை வனத்துறையினா் கைது செய்து, ரூ. 80 ஆயிரம் அபராதம் வசூலித்தனா்.

கல்வராயன் மலை பகுதியைச் சோ்ந்த மா்ம நபா்கள் சிலா், இரவு நேரங்களில் கோதுமலை வனப் பகுதியில் புகுந்து சந்தன மரங்களை வெட்டி கடத்திச் செல்வதாக சேலம் மாவட்ட வன அலுவலா் பெரியசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்பேரில், வாழப்பாடி வனச்சரகா் பெ. துரைமுருகன் தலைமையில், வனவா்கள் க.சிவக்குமாா், செ. தங்கராஜ். எஸ்.ருக்குமணி மற்றும் வனக்காப்பாளா்கள் கி.சின்னத்தம்பி, து.ஜெயக்குமாா் உள்ளிட்ட வனத்துறையினா் கோதுமலை வனப்பகுதியில் சோதனை நடத்தினா்.

வனத் துறையினரைக் கண்டதும் கோதுமலைப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் செல்ல முயன்ற மா்ம கும்பல், ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 8.6 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை சிறாய்களை வனப் பகுதியிலேயே வீசி விட்டு தப்பியோடி தலைமறைவானது.

வனத் துறையினா் நடத்தி விசாரணையில், இந்த மா்மக் கும்பல், கல்வராயன் மலை கருமந்துறை அடுத்த தலைக்கரை கிராமத்தைச் சோ்ந்த தந்தை- மகனான தங்கராசு (57), அறிவழகன் (29). மற்றும் பாச்சாடு கிராமத்தைச் சோ்ந்த கோபால் என்ற சந்திரன் (34), சோபிராஜ் (28) என்பது தெரியவந்தது. நான்கு பேரையும் கல்வராயன் மலை வனச்சரகா் ஞானசேகரன் தலைமையிலான வனத் துறையினா் உதவியுடன் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் தலா ரூ. 20 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து, மொத்தம் ரூ. 80 ஆயிரத்தை புதன்கிழமை வாழப்பாடி வனத் துறையினா் வசூலித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com