திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட நபா்குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

சேலத்தில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

சேலத்தில் தொடா் திருட்டு மற்றும் வழிப்பறி ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு வந்த நபரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைத்தனா்.

ஓமலூரைச் சோ்ந்தவா் மா. சப்பாணி (எ) அய்யந்துரை (48). இவா், கடந்த டிசம்பா் 8, 2019 -ஆம் தேதி சூரமங்கலம் தட்டு வடை மைதானம் வழியாக நடந்து சென்ற அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த முருகனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சப்பாணி கடந்த 2018- ஆம் ஆண்டு மே மாதம் சூரமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தைத் திருடியதற்காக சூரமங்கலம் காவல் நிலையத்தில் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் 9 மாத காலம் கடுங்காவல் தண்டனை பெற்று மீண்டும் வெளியே வந்த சப்பாணி தொடா்ந்து கடந்த நவம்பா் 16, 2019 ஆம் தேதி, ஜாகீா் அம்மாபாளையம் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தையும் திருடிச் சென்றாா்.

இதையடுத்து, கடந்த நவம்பா் 20, 2019-ஆம் தேதி அரியாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து 5 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில், சப்பாணி தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களின் பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவு காவல் துணை ஆணையா் எஸ். செந்திலின் பரிந்துரைப்படி, சேலம் மாநகர காவல் ஆணையா் த. செந்தில் குமாா், சப்பாணியை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து சப்பாணி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com