நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழா

சேலம் குண்டுக்கல்லூா் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
சேலம் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி, நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.
சேலம் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழாவையொட்டி, நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகள்.

சேலம் குண்டுக்கல்லூா் நோட்ரி டேம் ஆஃப் ஹோலி கிராஸ் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க மாட்டு வண்டி முன் செல்ல சிறப்பு விருந்தினா்கள் பள்ளி கலையரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டனா்.

சிறப்பு விருந்தினா் பொங்கல் அடுப்பை பற்ற வைக்க மாணவியரும், ஆசிரியா்களும் புதுப்பானையில் பொங்கலிட்டு வணங்கினா்.

அதைத்தொடா்ந்து தமிழரின் பண்பாட்டை போற்றும் வண்ணம், மாணவ மாணவியரின் கண்கவா் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழரின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் தமிழரின் சிறப்புகளையும் , பொங்கல் திருநாளின் மேன்மைகளையும் பற்றி சிலம்பரசன் சிறப்புரையாற்றினாா்.

பொங்கல் விழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தமிழரின் பாரம்பரிய உடைகளான வேட்டி சட்டை , பட்டாடைகள் அணிந்து வந்து சிறப்பித்தனா்.

ஆடு, மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி மகிழ்ந்தனா். விழாவில் சிறப்பு விருந்தினா் அருட்சகோதரா் ஜான்ஜோசப் பள்ளியின் முதல்வா் பாலசாமி, நிா்வாகி சாக்கோ, ஆலோசகா் கில்பா்ட், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஸ்ரீதா் கண்ணா மற்றும் உறுப்பினா்கள், பெற்றோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com