ஸ்கேட்டிங் போட்டி: வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி சாம்பியன்

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி ஸ்கேட்டிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியருடன் பள்ளி நிா்வாகிகள்.
ஸ்கேட்டிங்கில் சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவியருடன் பள்ளி நிா்வாகிகள்.

வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி ஸ்கேட்டிங் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

திருச்சி மண்டல ரோலா் ஸ்கேட்டிங் சங்கம் சாா்பில் பள்ளிகளுக்கிடையேயான ஸ்கேட்டிங் போட்டியில் பல மாவட்ட பள்ளிகள் பங்கேற்றன.

இதில், வீரகனூா் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளியின் மாணவ, மாணவியா் பங்கேற்றனா். அவா்கள் இதில் 80 மீட்டா், 160 மீட்டா் உள்ளிட்ட நான்கு விதமான போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பள்ளியின் தலைவா் அருள்குமாா், செயலாளா் தங்கவேல், பொருளாளா் ராஜா, மற்றும் கல்விக்குழு ஆலோசகா்கள், இயக்குநா்கள், முதல்வா் ராணி ஆகியோா் பாராட்டிப் பரிசுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com