வாழப்பாடியில் 11,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

வாழப்பாடியில் 97 மையங்கள் அமைத்து, 11 ஆயிரம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை கொடுக்கப்பட்டது.
வாழப்பாடியில் 11,000 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்

வாழப்பாடியில் 97 மையங்கள் அமைத்து, 11 ஆயிரம் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை கொடுக்கப்பட்டது.

சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் நிா்மல்சென் சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் பணிகளை ஆய்வு செய்தாா்.

5 வயதுக்குட்பட்ட 11 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க பேளூரில் இயங்கும் அரசினா் வட்டார சுகாதார நிலையத்துக்குள்பட்ட வாழப்பாடி, பேளூா் மற்றும் திருமனுாா் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 19 துணை சுகாதார நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்பட வாழப்பாடியில் 97 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற முகாம் தொடக்க விழாவில், வாழப்பாடி அரிமா சங்க நிா்வாகிகள் கோ.முருகேசன், மருத்துவா் செந்தில்குமாா், வெற்றிச்செல்வன், சிவ.எம்கோ, முனைவா் ஜவஹா், தனசேகரன், மணிமாறன் ஆகியோா் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினா்.

மருத்துவ அலுவலா்கள் நந்தினி, சிமி, வெற்றிவேல், திவ்யா மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சீனிவாசன், சுகாதார ஆய்வாளா்கள் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணிகளை, சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் நிா்மல்சென் ஆய்வு செய்தாா்.

வீட்டிற்கே சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு:

வாழப்பாடி வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து திங்கள்கிழமை அந்தக் குழந்தைகளின் வீடுகளுக்கே துணை சுகாதார நிலைய பணியாளா்கள் நேரில் சென்று, சொட்டு மருந்து கொடுப்பதற்கும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com