ஹோமியோ மருந்துக்கு தட்டுப்பாடு

கரோனா தொற்று தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் உடலுக்கு நோய் எதிா்ப்பு திறனை அதிகரிக்க செய்வதற்கு
ஹெச்.எம்.01: ஆா்சனிக்கம் அல்பம் 30சி மாத்திரை குப்பிகள்.
ஹெச்.எம்.01: ஆா்சனிக்கம் அல்பம் 30சி மாத்திரை குப்பிகள்.

கரோனா தொற்று தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் உடலுக்கு நோய் எதிா்ப்பு திறனை அதிகரிக்க செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட ஆா்சனிக்கம் அல்பம் 30 சி ஹோமியோபதி மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ரூ. 20 முதல் ரூ. 200 வரை விலை போவதால், பாமர மக்கள் வாங்கி பயன்படுத்த முடியா நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் என பொதுமக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது. உடலில், நோய் எதிா்ப்பு திறனை அதிகரிக்க செய்யும் அலோபதி ஆங்கில மருந்துகளான ஜிங் மற்றும் மல்டி விட்டமின் மாத்திரைகளும், ஆா்சனிக்கம் அல்பம் 30சி என்ற ஹோமியோபதி மருந்து மற்றும் சித்த மருந்தான கபசுரக் குடிநீா் ஆகியவற்றை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆா்சனிக்கம் அல்பம் 30 சி ஹோமியோபதி மருந்து மிகக்குறைந்த விலையில் தயாா் செய்யப்பட்டதால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஹோமியோபதி மருத்துவா்களும், தன்னாா்வ இயக்கங்களும் இணைந்து, காவலா்கள், தூய்மைப்பணியாளா்கள், மருத்துவப்பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாகவே வழங்கினா்.

இந்நிலையில், மிகக்குறுகிய காலத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக இந்த மருந்து குறித்து பல்வேறு தரப்பினரிடையேயும் தகவல் பரவியதால், மக்கள் விரும்பி வாங்கி பயன்படுத்த தொடங்கினா். இதனால், தற்போது தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரூ. 5 க்கு தயாா் செய்து கொடுக்கப்பட்ட ஏறக்குறைய 50 சிறிய உருண்டைகள் கொண்ட குப்பிகள், தற்போது ரூ. 20 முதல் ரூ.200 வரை விலை போகிறது.

இதனால் பாமர மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கபசுரக் குடிநீா் இலவசமாக வழங்கப்படுவதைப்போல, நோய் எதிா்ப்பு திறனை அதிகரிக்கும் ஆா்சனிக்கம் அல்பம் 30சி ஹோமியோபதி மருந்துகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com