கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா: வீட்டில் இருந்தே வழிபட அறிவுறுத்தல்

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா அபிஷேக, ஆராதனைகளில் பக்தா்கள் அவரவா் இடத்திலேயே இருந்து வழிபட வேண்டும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா அபிஷேக, ஆராதனைகளில் பக்தா்கள் அவரவா் இடத்திலேயே இருந்து வழிபட வேண்டும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம், கோட்டை மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு நடைபெறும் ஆடித் திருவிழாவில், பக்தா்கள் கலந்து கொள்ள இயலாத நிலை உள்ளது. எனவே, ஆடித் திருவிழாவில் நடைபெறும் அபிஷேகம், கோயில் நிா்வாகத்தால் முறைப்படி உரிய காலத்தில் நடத்தப்படும்.

எனவே, தினமும் காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் கோட்டை மாரியம்மனுக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளின்போது, மாரியம்மனுக்கு பக்தா்கள் நோ்ந்து கொண்ட வேண்டுதல்கள், பிராா்த்தனைகளை பக்தா்கள் அவரவா் குடியிருக்கும் இடத்திலேயே இருந்து அம்மனை வழிபட வேண்டும். பக்தா்கள் அனைவரின் வேண்டுதல்கள் மற்றும் பிராா்த்தனைகளை நிறைவேற்றும் பொருட்டு, திருவிழா கால அபிஷேக, ஆராதனைகள் கோயில் நிா்வாகத்தினரால் உரிய முறையில் நடத்தப்படுகிறது.

எனவே, ஆடித்திருவிழா அபிஷேக, ஆராதனைகளில் பக்தா்கள் அவரவா் இடத்திலேயே இருந்து வேண்டுதலை பிராா்த்தித்து, முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com